Asianet News TamilAsianet News Tamil

Watch : 20 ஆண்டு கால எதிர்பார்ப்பு! முத்துப்பேட்டை தாலுக்கா உயதம்!

20 ஆண்டு காலமாக மக்கள் எதிர்பார்த்த முத்துப்பேட்டை தாலுக்கா உதயமானது. காணொளி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
 

முத்துப்பேட்டையை தலைமை இடமாகக் கொண்ட புதிய தாலுக்கா வேண்டும் என கடந்த 20 ஆண்டு காலமாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சி காலத்தில் முத்துப்பேட்டை தாலுகா அறிவிப்பு வெளியானது. அதன் பின்னர் 2013ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

பல்வேறு அரசியல் காரணங்களுக்காக தொடர்ந்து முத்துப்பேட்டை தாலுகா அரசாணை நடைமுறைக்கு வராமல் இருந்த நிலையில், தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்னர் சட்டமன்றத்தில் இது தொடர்பான கோரிக்கையை திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விடுத்த கோரிக்கையை ஏற்று, புதிதாக அரசாணை கடந்த மார்ச் 28ஆம் தேதி வெளியிடப்பட்டது.

அதன்படி மன்னார்குடி வட்டத்தில் இருந்தும், திருத்துறைப்பூண்டி வட்டத்தில் இருந்தும் 38 கிராமங்கள் பிரித்து எடுக்கப்பட்டு முத்துப்பேட்டையை தலைமை இடமாகக் கொண்ட புதிய தனி வட்டம் செயல்பட தொடங்கியுள்ளது. இதனை தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையிலிருந்து படி காணொளி காட்சி வாயிலாக முத்துப்பேட்டை தனி வட்டத்தை தொடங்கி வைத்தார்.



அதையொட்டி திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ கே எஸ் விஜயன், தாட்கோ தலைவர் மதிவாணன், மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு ஆகியோர் பங்கேற்றனர்.

Video Top Stories