Asianet News TamilAsianet News Tamil

நெருப்பை தாண்டி குதித்த மாடுகள்; திருவாரூர் பொங்கல் விழாவில் சுவாரசியம்

தீயை தாண்டி தாவி குதித்த மாடுகள் திருவாரூர் சாய் பசு மடத்தில் சிவ வாத்தியங்கள் முழங்க பொங்கல்  விழா உற்சாக கொண்டாட்டம்.

தமிழர்களின் பாரம்பரிய திருவிழாக்களில் ஒன்றான பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. உழவர்களைப் போற்றும் பொங்கல் விழா நேற்று நடைபெற்று முடிந்த நிலையில் இன்று விவசாயிகளுக்கும், மனித சமுதாயத்திற்கும் உதவி வருகின்ற கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவாக மாட்டுப் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவாரூர் வாசன் நகரில் உள்ள உள்ள ஸ்கந்த சாய் தியான பீடத்தில் உள்ள சாய் பசு மடத்தில் நடைகளுக்கு மாட்டுப் பொங்கல் விழா சிறப்பாக நடத்தப்பட்டது. 

அதையொட்டி மடத்திலுள்ள கால்நடைகளை குளிப்பாட்டி மலர் மாலை அணிவித்து மஞ்சள் சந்தனம் பூசி மரியாதை செய்யப்பட்டு கால்நடைகளுக்கு நெட்டி மாவிலை உள்ளிட்ட பல்வேறு மாலைகள் அணிவித்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தனர்.தொடர்ந்து பசு மடத்தில் பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு வழிபாடு நடத்தப்பட்டது.பின்னர் மாடுகளுக்கு வெண் பொங்கல் கொடுத்து கொடுத்து வழிபட்டனர்.

சிவ வாத்தியங்கள் முழங்க பொங்கலோ பொங்கல் என கூச்சலிட்டு மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது.இதனையடுத்து மாடுகள் கோவிலை சுற்றியுள்ள வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு வைக்கோலில் தீ வைத்து மாடுகள் உலக்கையை தாண்டும் நிகழ்வு மாடுகளுக்கு கண் திருஷ்டியை போக்கும் விதமாக நடத்தப்பட்டது.

Video Top Stories