ஆட்டுக்குட்டிக்காக பால் சுரக்கும் பசு; இணையத்தில் வைரலாகும் வீடியோ

திருவாரூர் மாவட்டத்தில் பசு மாட்டிடம் பால் குடிக்கும் ஆட்டுக் குட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this Video

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த நெடுவாக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி அசோக் குமார். இவரது குடும்பத்தினர் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். இதில் ஒரு பசுமாடு மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு கன்றை ஈன்று பால் கொடுத்து வருகிறது. இந்நிலையில் அவர் வீட்டில் வளர்த்து வரும் ஆடு ஒன்று சில நாட்களுக்கு முன் குட்டி ஒன்றை ஈன்றது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அசோக் குமாரின் வீட்டில் ஆடு மாடுகள் ஒன்றாக வளர்ந்து வருவதால் அவற்றுக்குள் பாசப்பிணைப்பு ஏற்பட்டு ஆட்டுக்குட்டியானது பசுமாட்டிடம் சில நாட்களாக பால் குடித்து வருகிறது. இது காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆட்டுக்குட்டி, பசு மாட்டிடம் பால் குடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Video