Video: திருப்பூரில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி இளைஞர்கள் போராட்டம்
திருப்பூர் மாவட்டம் அலகு மலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கேட்டு ஏறு தழுவுதல் ஜல்லிக்கட்டு பேரவை அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டம் அலகுமலையில் கடந்த நான்கு வருடங்களாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதன் காரணமாக விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக ஜல்லிக்கட்டுக்கு ஊராட்சி மன்ற தலைவர் எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கில் விசாரணை மேற்கொண்டு 6 மாத காலத்தில் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகள் போலவே இந்த ஆண்டும் அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திருப்பூர் ஏறு தழுவுதல் ஜல்லிக்கட்டு பேரவை அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.