வைகுண்ட ஏகாதசி; திருப்பூரில் தடல்புடலாக நடைபெறும் லட்டு தயாரிக்கும் பணி - பக்தர்கள் மும்முரம்
திருப்பூரில் வைகுண்ட ஏகாதிசி விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஒரு லட்சத்து 8லட்டுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி திருப்பூர் ஸ்ரீ வீரராகவர் பெருமாள் கோவிலில் நாளை பரமபத வாசல் திறப்பு வைபவம் நடைபெற உள்ளது. அதிகாலை நேரம் எம்பெருமான் பரமபத வாசல் வழியாக பிரம்மவேசித்து பக்தர்களுக்கு அருள் பழிக்க இருக்கிறார்.
அதனைத் தொடர்ந்து வரும் பக்தர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் 10வது ஆண்டாக லட்டு பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் ஒரு லட்சத்து எட்டு லட்டுகள் தயாரிக்கும் பணி நடந்து கொண்டிருக்கின்றது. 20 சமையல் குழுவினர் மற்றும் 200க்கும் மேற்பட்ட கர சேவர்கள் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
நாளைய வைகுண்ட ஏகாதசி விழாவில் அதிகாலை 5 .30 மணிக்கு பரம்ப பரவாசல் திறக்கப்படும் இரவு வரை தொடர்ச்சியாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர். பரமபத வாசல் வழியாக வெளியேறும் பக்தர்களுக்கு தலா ஒரு லட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொண்டு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.