மூன்று மாநில தேர்தல் வெற்றி; திருப்பூரில் பட்டாசு வெடித்து கொண்டாடிய பாஜகவினர்

மூன்று மாநிலங்களில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் பாஜகவினர் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

Share this Video

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் சட்டசபைக்குள் நடந்த தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. அதில் தெலங்கானா தவிர்த்து மூன்று மாநிலங்களும் பாஜக பெரும்பான்மையான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை தமிழக பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகத்தின் அருகில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

Related Video