போலீச நம்புனா வேலைக்கு ஆகாது; திருடனை ஒரே நாளில் பிடித்து போலீசிடம் ஒப்படைத்த பல்லடம் வியாபாரிகள்

அடுத்தடுத்து 3 கடைகளில் திருட்டு நடைபெற்ற நிலையில், சிசிடிவியில் சிக்கிய நபரை ஒரே நாளில் அதே இடத்தில் பிடித்த வியாபாரிகள் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். 

Share this Video

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தினசரி சந்தையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அடுத்தடுத்து வணிக வளாக வியாபார கடைகளில் குழந்தையுடன் தம்பதி திருட்டில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நேற்று சுமார் 7 மணி அளவில் அதே மர்ம நபர்கள் அப்பகுதியில் உலா வருவதை கண்ட வியாபாரிகள் சிசிடிவியை ஒப்பிட்டுப் பார்க்கையில் திருட்டில் ஈடுபட்டது அவர்கள் தான் என்று கண்டறிந்து மடக்கிப்பிடித்து பல்லடம் காவல் துறையினரை வரவழைத்து ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Related Video