Asianet News TamilAsianet News Tamil

Robotic Exhibition: உடுமலையில் முதல்முறையாக நடத்தப்பட்ட ரோபோ கண்காட்சி; வியந்து பார்த்த பள்ளி மாணவர்கள்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள விஏவி இன்டர்நேஷனல் பள்ளியில் முதல் முறையாக ரோபோக்கள் கண்காட்சி மற்றும் அறிவியல் கண்காட்சியை மாணவர்கள் வியந்து பார்த்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள விஏவி இன்டர்நேஷனல் பள்ளியில் முதல் முறையாக ரோபோக்கள் கண்காட்சி மற்றும் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. அறிவியல் கண்டுபிடிப்பு துறையில் இளம் தலைமுறைக்கும், மாணவர்களுக்கும் அறிவியல் மற்றும் நவீன தொழில்நுட்பத்தில் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக கண்காட்சி அமைக்கப்பட்டது. 

குறிப்பாக செயற்கை நுண்ணறிவின் மூலம் செயல்படும் பியானோ வாசிக்கும் ரோபோ, வேளாண்மைக்கு உதவும் ரோபோக்கள் மற்றும் டிரோன் மூலமாக உரம்  தெளிக்கும் ரோபோ, சமையல் செய்யும் ரோபோ, தொழிற்சாலைகளில் பயன்படுத்தும் ரோபோக்கள், கன்னி வெடிகளை அகற்றும் நாய் வடிவிலான ரோபோக்கள் உட்பட பல்வேறு வகையான ரோபோக்கள்  காட்சிப்படுத்தப்பட்டன. 

மேலும் பள்ளி மாணவர்களின் முயற்சியில் விக்ரம் லெண்டர்  போன்ற விண்வெளி செயற்கைக்கோள்கள், நீர்மின் ஜெனரேட்டர்கள், ஏசி மற்றும் டிசி மோட்டார்கள் மூலம் பல்வேறு விதமான  அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் புத்தக வாசிப்பு மற்றும் புரிந்து கொள்ளும் திறனை மேம்படுத்துவதற்காக புத்தக கண்காட்சி நடத்தப்பட்டது.

உடுமலையில் முதல் முறையாக நடைபெற்ற ரோபோக்கள் கண்காட்சி மற்றும் அறிவியல் புத்தக கண்காட்சியை பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் கண்டு வியந்தனர்.

Video Top Stories