அனைத்து கட்சி நிர்வாகிகள் ஒன்றிணைந்து விஜயகாந்திற்கு அஞ்சலி; திருப்பூரில் ஊர்வலமாக வந்து அஞ்சலி

தாராபுரத்தில் மறைந்த தே.மு.தி.க தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்திற்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக அனைத்துக்கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Share this Video

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் தேமுதிக தலைவரும், தமிழக சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்திற்கு நினைவு அஞ்சலி செலுத்தும் விதமாக அரசியல் கட்சிகள் சார்பில் ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தில் கட்சி பேதமின்றி அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு விஜயகாந்த் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

முன்னதாக பெரியார் திடலில் இருந்து புறப்பட்ட மௌன ஊர்வலம் சி.எஸ்.ஐ ரோடு தினசரி காய்கறி மார்க்கெட் சாலை உடுமலை சாலை பெரிய கடைவீதி வழியாக அண்ணா சாலையில் ஊர்வலம் நிறைவு அடைந்தது. இந்த நிகழ்வில் பல்வேறு கட்சிகள், அமைப்புகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Video