Asianet News TamilAsianet News Tamil

தாராபுரத்தில் கோலாகலமாக நடைபெற்ற பாரம்பரிய கும்மியாட்ட நிகழ்ச்சி; 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

தாராபுரம் அருகே மணலூர் கிராமத்தில் சிறுவர், சிறுமியர் என 400-க்கும் மேற்பட்ட கும்மியாட்டக் குழுவினர் நடனம் ஆடி அசத்தல்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கன்னிவாடி அருகே உள்ள மணலூர் பகுதியில் அமைந்துள்ள செல்லாண்டியம்மன் திருக்கோவில் வளாகத்தில் தமிழர் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக குதிரை, காளைமாடு, பசுமாடுகளுடன் பெண்கள் முளைப்பாரியை ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்துச் சென்று, சுவாமி தரிசனம் செய்து பவளக்கொடி கும்மியாட்ட குழுவினரின் 79-வது அரங்கேற்ற விழா நடைபெற்றது.

இன்றைய நாகரீக உலகத்தில் பழமையான கலைகள் ஒவ்வொன்றும் அழிந்து வரும் நிலையில், பழமையான கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோடந்தூர் கிராமத்தில் பவளக்கொடி கும்மியாட்டக் குழுவினரின் அரங்கேற்ற விழா நடைபெற்றது. கும்மியாட்டத்தில் தாராபுரம் மட்டுமின்றி அண்டை மாவட்டத்தில் இருந்தும் 400-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர், பெண்கள், ஆண்கள் என கும்மி நடனம் ஆடி அசத்தினர்.

Video Top Stories