Asianet News TamilAsianet News Tamil

திருப்பூரில் பாரம்பரி முறைப்படி கும்மியடித்து கிராம மக்கள் ஒன்று கூடி பொங்கலிட்டு கொண்டாட்டம்

திருப்பூரில் பாரம்பரிய முறைப்படி கும்டியடித்து, நடனமாடி கிராம மக்கள் ஒன்று கூடி பொங்கல் வைத்து விழாவை சிறப்பாகக் கொண்டாடினர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள கிராமங்களில் பொங்கள் விழா சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக குடிமங்கலம் பகுதி லிங்கம்மாவூர், கொங்கல் நகரம், அம்மாபட்டி, உள்ளிட்ட பல பகுதிகளில் மார்கழி முதல் தேதியில் இருந்து தை மாதம் வரை இரவு நேரங்களில் கும்மியாட்டம், சலக் கருது ஆட்டம், மாடுபிடித்தல், உள்ளிட்ட பரம்பரிய விளையாட்டுகளை பெண்கள், ஆண்கள், குழந்தைகள் அனைவரும் விளையாடி மகிழ்ந்தனர். 

மேலும் பொங்கல் திருவிழா அன்று காளைகளுக்கு சிறப்பு பூஜை செய்து அருகில் உள்ள சோம வாரப்பட்டி ஆல் கொண்டமால் மாலா கோவிலில் பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதனால் தாங்கள் வளரக்கும் ஆடு, மாடுகள் நோயின்றி ஆரோக்கியத்துடன் இருக்கும் என்று பூஜை செய்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Video Top Stories