Tiruppur Government Bus Accident: திருப்பூர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து மோதி ஒருவர் பலி

திருப்பூர் பேருந்து நிலையத்தில் வேகமாக வந்த அரசுப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Video

திருப்பூர் பேருந்து நிலையம் வழக்கம் போல் சனிக்கிழமை இரவு பரபரப்பாகக் காணப்பட்டது. அப்போது பேருந்து நிலையத்தில் இருந்து கோவை நோக்கி அரசுப் பேருந்து ஒன்று புறப்பட்டது. பேருந்து நிலைத்தில் இருந்து வெளியே வரும் பாதையில் சாலையை கடக்க முயன்ற நபர் மீது அரசுப் பேருந்து வேகமாக மோதி, அவர் மீது ஏறி, இறங்கியது. இந்த விபத்தில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பேருந்து நிலையத்திற்குள் ஓட்டுநர்கள் கண்டிப்பாக பேருந்துகளை மிதமான வேகத்திலேயே பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Video