ஆண்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக வேட்டி சட்டையில் குத்தாட்டம் போட்ட வீரமங்கைகள்
திருப்பூரில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் திருவிழாவில் மாணவிகள் வேட்டி சட்டை அணிந்து நடனமாடி தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
திருப்பூர் ஏவிபி கல்லூரியில் பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. மாவிளக்கு, முளைப்பாரி எடுத்து வந்து மாணவிகள் பொங்கல் வைத்து கொண்டாடினார்கள். இதில் ஏராளமான மாணவிகள் சேலை அணிந்து வந்து உற்சாகமாக பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்கள். வழக்கமாக மாணவிகள் சேலை அணிந்து வந்து பொங்கல் கொண்டாடும் நிலையில் கல்லூரியில் படிக்கும் 50க்கும் மேற்பட்ட மாணவிகள் வித்தியாசமாக வேஷ்டி அணிந்து வந்து பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்கள். கல்லூரியில் நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சியில் வாலிபர்களை போல வேஷ்டி, சட்டை, கண்ணாடி அணிந்து அவர்கள் நடனமாடி வந்தது வித்தியாசமாக இருந்தது. வேஸ்ட்டி அணிந்து வந்த மாணவிகள் உற்சாகமாக பாடலுக்கு நடனமாடி மகிழ்ந்தார்கள்.