பல்லடம் அருகே விதவைப் பெண்ணை தாக்கி கடையை அடித்து நொருக்க முயன்ற போதை ஆசாமிகள்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே விதவைப்பெண்ணின் கடையில் நுழைந்து இளைஞர்கள் சிலர் ரகளையில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this Video

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இடுவாய் பாரதிபுரத்தில் கிருஷ்ணவேணி என்பவர் தனது மகளுடன் வசித்து வருகிறார். கணவனை இழந்த கிருஷ்ணவேனி அதே பகுதியில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மளிகை கடையில் கிருஷ்ணவேணி மற்றும் அவரது மகள் வியாபாரம் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 

அப்போது அங்கு போதையில் வந்த 2 வாலிபர்கள் கிருஷ்ணவேணியின் கடையில் பொருள் வாங்குவது போல் வந்து தகராறில் ஈடுபட்டு கடையினுள் வைத்திருந்த கண்ணாடி கூண்டுகளை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இச்சம்பவம் குறித்து மங்கலம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Video