திமுகவினரின் உண்ணாவிரதப் போராட்டத்தில் டீ பிரேக் எடுத்த தொண்டர்கள்; சிற்றுண்டிக்கு படையெடுத்த உடன்பிறப்புகள்

திருப்பூரில் நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டத்தின் போது திமுகவினர் சிற்றுண்டியில் டீ, காபி, வடை சாப்பிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this Video

மத்திய அரசு நீட் தேர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவரணி சார்பாக நேற்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவர் அணி சார்பாக, திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், உண்ணாவிரத போராட்டம் துவஙகிய சில மணி நேரங்களில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் போராட்ட மேடைக்கு அருகாமையில் இருந்த உணவகத்தில் காபி, சிற்றுண்டி உண்ணும் வீடியோ தற்போது பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Video