திருப்பூரில் நலத்திட்ட பொருட்களுக்காக மேடையை போர்க்களமாக்கிய இளைஞர்கள்; அதிமுக கூட்டத்தில் கும்மாங்குத்து

திருப்பூரில் அதிமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து நலத்திட்ட பொருக்ளை வாங்க பொதுமக்கள் முன்டியடித்ததால் நெருக்கடி ஏற்பட்டு இளைஞர்கள் சிலர் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

First Published Mar 4, 2024, 3:17 PM IST | Last Updated Mar 4, 2024, 3:17 PM IST

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த கள்ளிமேடு பகுதியில் அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. அண்மையில் பாஜக சார்பில் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழா பிரதமர் பங்கேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டை முறியடிக்கும் விதமாக பல்லடம் சட்டமன்ற உறுப்பினர்  எம் எஸ் எம் ஆனந்தன் தலைமையில், முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும்  வேலுமணி ஆகியோர் பங்கேற்று நடைபெற்றது. 

இதில் பேசிய முன்னாள் அமைச்சர் வேலுமணி அம்மாவின் பல்வேறு திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போடப்பட்டுவிட்டது. நாடாளுமன்றத் தேர்தலில் கடந்த முறை வெற்றி பெற்ற எம்பிக்கள்  காணாமல் போய்விட்டார்கள். அவர்களை யாருக்காவது அடையாளம் தெரியுமா? என்று கேட்டு திமுகவை கடுமையாக சாடி பேசினார்.

தொடர்ந்து இந்த நிகழ்வில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் தையல் மெஷின், இஸ்திரிப் பெட்டி என சுய தொழில் புரிவதற்கான பொருட்கள் வழங்க ஆரம்பித்து சுமார் 10 பேர் மட்டும் மேடையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி தலைமையில் பெற்றுக்கொண்டனர்.

பின்னர் அனைவரும் பரிசு பொருட்களை வாங்க முன்டியடித்ததால் கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. சிரமப்பட்ட பொதுமக்கள் வரிசையாக வாங்க முற்பட்டனர். அப்போது மேடையிலேயே பொருட்களை வாங்கும் இடத்தில் சில வாலிபர்கள் ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கிக் கொண்ட சம்பவம் அரங்கேறியது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Video Top Stories