பல்லடத்தில் சாலையை கடக்க முயன்றவரை மோதி வீசிவிட்டு நிற்காமல் சென்ற கார்; சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாலையை கடக்க முயன்ற நபர் மீது வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

First Published Sep 19, 2023, 10:09 AM IST | Last Updated Sep 19, 2023, 10:09 AM IST

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பச்சாபாளையத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் அவர் பிரபல பேக்கரி ஒன்றில் டீ சாப்பிட்டு விட்டு கோவை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கோவையில் இருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் அவர் தூக்கி வீசாப்பட்டு படுகாயமடைந்தார். இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக  அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

துணி காயவைக்கும்போது நேர்ந்த விபத்து; மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலி

மேலும் இச்சம்பவம் குறித்து பல்லடம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற காரை காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு வலை வீசி தேடி வருகின்றனர்.

Video Top Stories