3 காவலர்களின் கண்களில் மண்ணை தூவி ஓட்டம் பிடித்த கைதி; இறுதியில் நடந்த டுவிஸ்ட்

திருப்பூரில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த அழைத்து வந்த கைதி தப்பியோடிய நிலையில் காவல்துறையினர் மடக்கிப்பிடித்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.

First Published Jun 2, 2023, 9:47 AM IST | Last Updated Jun 2, 2023, 9:49 AM IST

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நேற்று முன்தினம் மாலை காவல் துறையினர் ஒரு கைதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு பல்லடம் பேருந்து நிலையம் செல்வதற்காக அவரை அழைத்துக் கொண்டு கோவை - திருச்சி பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தனர். பேருந்து நிலையம் அருகே சென்றபோது திடீரென அந்த கைதி காவல் துறையினரிடம் இருந்து தப்பி ஓடி னார். 

காவல் துறையினர் அவரை துரத்தி பிடிக்க முயன்றனர். சாலையின் தடுப்பை தாண்டி குதித்து கைதி ஓட்டம் பிடித்தார். அப்போது எதிரே வந்த சரக்கு வாகனத்தில் மோதி கீழே விழுந்தார். இதையடுத்து அவரை மடக்கிபிடித்த காவல் துறையினர் மீண்டும் பல்லடம் பேருந்து நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். இந்த சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. தற்போது இந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் வைரலாகி வருகிறது.

Video Top Stories