Asianet News TamilAsianet News Tamil

யாருயா நீ இந்த காட்டு காட்ற; வாயால் தேங்காய் உரித்து இந்தியில் அனுமாருடன் டீல் பேசும் இளைஞர்

திருப்பூரில் இளைஞர் ஒருவர் வாயால் தேங்காய் உரித்து இந்தியில் அனுமார் சிலையுடன் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

First Published Nov 18, 2023, 1:16 PM IST | Last Updated Nov 18, 2023, 1:16 PM IST

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பொங்கலூர் ஊராட்சிக்கு உட்பட்ட அழகுமலை கோவில் பிரசித்தி பெற்ற முருகர் தலமாக இருந்து வருகிறது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தினந்தோறும் வெவ்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கந்த சஷ்டி விழாவின் நான்காம் நாளான நேற்று காரிய சித்தி ஆஞ்சநேயர் சந்நிதி முன்பு வட மாநில இளைஞர் ஒருவர் தரிசனம் செய்து கொண்டிருந்தார். 

அப்போது அவருக்கு அருள் ஏற்பட்ட நிலையில் ஆஞ்சநேயர் போலவே பாவனை செய்து ஆஞ்சநேயர் சிலையிடம் ஹிந்தியில் பேசியவாறு பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட தேங்காய்களை தனது பற்களால் கடித்து உரித்தார். அனுமன் போலவே பாவனை செய்து அவர் தேங்காய்களை பற்களால் உறித்ததை கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டதோடு தங்கள் செல்போன்களில் படம் பிடித்து அந்த வடமாநில இளைஞரை பயபக்தியுடன் வழிபட்டனர். 

சிறிது நேரத்திற்கு பின்பு அந்த இளைஞர் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு இயல்பு நிலைக்கு திரும்பினார். இதனால் கோயில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Video Top Stories