லால் சலாம் ரஜினியை தத்ரூபமாக சிலையாக வடித்து அசத்திய இளைஞர்; வைரல் வீடியோ!!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே நடிகர் ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் லால் சலாம் படத்தில் வரும் நடிகர் ரஜினிகாந்தின் உருவத்தை தத்ரூபமாக சிலையாக வடித்து அசத்தி உள்ளார்.

Share this Video

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்டம், பூளவாடி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்(வயது 27). மண்பாண்ட கலைஞரான இவர் மண்பாண்ட பொருட்கள் மட்டுமல்லாது களிமண்ணை பயன்படுத்த சிலைகள் செய்வதிலும் கைதேர்ந்தவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான இவர் தனது பெயரையே ரஜினி ரஞ்சித் என மாற்றியமைத்திருக்கிறார்.

ரஜினிகாந்தின் ஒவ்வொரு படம் வெளியாகும் பொழுதும் அவர் படத்தில் வரும் தோற்றத்தைப் போல சிலை செய்வது இவரது வழக்கம். தற்பொழுது ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தயாரிப்பில் ரஜினி தற்போது லால் சலாம் எனும் படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், மண்பாண்ட கலைஞரான ரஞ்சித் 2 அடி உயரத்தில் மொய்தீன் பாய் சிலையை தத்ரூபமாக வடித்துள்ளார்.

இதனை ரஜினியை நேரில் சந்தித்து கொடுக்க இருப்பதாக தெரிவிக்கின்றார். இவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

Related Video