Accident Video: தவறான திசையில் எண்ட்ரி கொடுத்த கார்; சாலையில் தலைகீழாக கவிழ்ந்த அதிர்ச்சி வீடியோ
திருப்பூர் மாவட்டம், காரணம்பேட்டை அருகே தனியார் பேருந்தை முந்த முயன்ற போது கார் விபத்துக்குள்ளான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டையில் இருந்து சூலூர் செல்லும் வழியில் உள்ள என்.ஆர்.டி. பெட்ரோல் பங்க் அருகே தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது பேருந்தை முந்தி செல்லும் நோக்கில் கார் ஒன்று தவறான திசையில் முன்னேறி வந்தது. திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராத விதமாக சாலையின் தடுப்பில் மோதி விபத்து தலைகீழாகக் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காரில் இருந்த பயணிகளில் இருவர் லேசான காயங்களுடன் தப்பினர். கார் விபத்துக்கு உள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காயம் அடைந்த இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், விபத்து தொடர்பாக பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.