VIDEO | கண்டெய்னர் வாகனம் மோதி 7வயது சிறுவன் பலி! பெற்றோர் மருத்துவமனையில் அனுமதி!

காங்கேயம் அருகே கண்டெய்னர் வாகனம் மோதியதில் படுகாயமடைந்த 7வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 

First Published Jun 27, 2023, 4:33 PM IST | Last Updated Jun 27, 2023, 4:33 PM IST

சேலத்தை சேர்ந்தவர் அப்துல்நபீப் (32) கூலி தொழிலாளி ஆன இவர் தனது மனைவி நிலாபர் நிஷா(28) மற்றும் அவரது 7 வயது மகனுடன், சேலத்தில் இருந்து, இருசக்கர வாகனம் மூலம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்திற்கு வந்து கொண்டிருந்தனர். சேலத்தில் இருந்து வண்டியை கணவர் ஓட்டி வந்த நிலையில், காங்கேயம் பிரிவுக்கு அருகே, களைப்பாக இருந்ததால், அவரது மனைவி நிலாபர் நிஷா, வண்டியை ஓட்ட துவங்கியதாக கூறப்படுகிறது.

சிறிது தூரத்திலேயே, சாலையின் வளைவில் திரும்பிய போது, எதிர்பாராத விதமாக, திருப்பூரில் இருந்து மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்த கன்டெய்னர் வாகனம் ஸ்கூட்டி மீது பயங்கரமாக மோதியது. இதில், படுகாயம் அடைந்த 7 வயது சிறுவன் மற்றும் சிறுவனின் பெற்றோர்கள், சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு, சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். அவனது உடலை கண்டு அவனது பெற்றோர்கள் கதறி அழுத காட்சி, பார்ப்பவர்கள் மனதை உருக்குவதாக இருந்தது.

இது குறித்து, தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Video Top Stories