திருப்பூரில் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் குவிக்கப்பட்ட 1069 மது பாட்டில்கள்; அதிகாரிகள் அதிரடி
திருப்பூர் மாநகர் மதுவிலக்கு காவல்துறை சார்பில் கடந்த ஐந்து மாதங்களில் நடைபெற்ற 203 குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 1069 மதுபாட்டில்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன.
திருப்பூர் மாநகரில் பல்வேறு இடங்களில் மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் மற்றும் மது பாக்கெட்டுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு காலாவதியான நிலையில் இதனை அழிக்க மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் உத்தரவுக்கு அனுப்பப்பட்டது. இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் அளித்த உத்தரவின் பேரில், அலுவலர் ராகவி முன்னிலையில் சுமார் இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான 1069 மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன.