புயலா? நாங்க பாடுனா சுனாமியே வழிவிடும்; மழை வெள்ளத்தின் நடுவே தேவாரம் பாடி வளைகாப்பு நடத்திய தம்பதி
நெல்லையில் வரலாறு காணாத கனமழை பெய்துவரும் நிலையில், மழை, வெள்ளத்தின் நடுவே தம்பதியர் இருவர் வளையல்காப்பு நடத்திய நிகழ்வு சமூக லைதளங்களில் வைலாகி வருகிறது.
வளிமண்டல சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியுள்ளது. ஒரு வருடம் முழுவதும் பெய்யவேண்டிய மழை ஒரே நாளில் பெய்துள்ளதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பகவதி, பார்வதி தம்பதியர் கர்ப்பிணியாக உள்ள பார்வதிக்கு வளையல் அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.
நெல்லை சந்திப்பில் உள்ள பிரபல திருமண மண்டபம் ஒன்றில் இவர்களது வளையல் அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு. திட்டமிட்டபடி தேவாரம், திருவாசகம் பாட நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சி தொடங்கிய சிறிது நேரத்தில் வானத்தை கிழித்துக் கொண்டு மழை கொட்டத் தொடங்கியது.
மழையின் தாக்கம் அதிகம் இருந்ததால் மண்டபத்தினுள்ளும் தண்ணீர் புகுந்து. தண்ணீர் வருவதை பொருட்படுத்தாத சிவனடியார்கள் தொடர்ந்து தேவாரம், திருவாசகம் பாடுவதில் முனைப்பு காட்டினர். தொடர்ந்து மழை அதிரித்து வெள்ள நீர் மேடையை மூழ்கடித்த பின்னரே நிகழ்ச்சி நிறைவு செய்யப்பட்டது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.