“நதியே நதியே காதல் நதியே நீயும் பெண் தானே” குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல்

வெள்ளப்பெருக்கு குறைந்ததைத் தொடர்ந்து ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளியலிட்டனர்.

Share this Video

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஐந்தருவி, பிரதான அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப்பயணிகளுக்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது. 

இந்நிலையில், வெள்ளப்பெருக்கு குறைந்ததைத் தொடர்ந்து பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி பழைய குற்றாலம், பிரதான அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் ஆனந்த குளிலிட்டு மகிழ்கின்றனர்.

Related Video