Watch : நெல்லை அருகே சொத்தை அபகரித்த மகன்! - தாயும். தங்கையும் தீக்குளிக்க முயற்சி!

நெல்லை அருகே சொத்தை அபகரிக்கும் மகன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தாய் மற்றும் தங்கை மாவட்ட ஆட்சித் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
 

Share this Video

நெல்லை மாவட்டம் திருத்துப்பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி அம்மாள். இவரது மகன் முத்தையா மற்றும் மகள் வெயிலாட்சி இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. வெயிலாட்சி கணவர் இல்லாததால் தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இசக்கியம்மாளுக்கு சொந்தமான சொத்துக்களை இரண்டு குழந்தைகளுக்கும் பிரித்து தருவதற்கு முயற்சி செய்து வந்துள்ளார். அப்போது அவரது மகன் முத்தையா சொத்துக்களை பிரித்து யாருக்கும் கொடுக்கக் கூடாது அனைத்து சொத்துக்களும் எனக்கு தான் என இசக்கியமாளிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இசக்கியம்மாளுக்கு கொலை மிரட்ட விடுத்த முத்தையா மீது நடவடிக்கை எடுகக்கோரி, தாயும், தங்கையும் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர். அப்போது தங்கள் கைகளில் வைத்திருந்த மண்எண்ணெய் எடுத்து இசக்கியம்மாள் அவரது மகள் வெயிலாட்சி ஆகிய இருவரும் தங்கள் மேல் ஊற்றிக் கொண்டனர்.

விரைந்து வந்த போலீசார் அவர்கள் இருவரையும் மீட்டு காவல்துறை வாகனத்தில் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

Related Video