Watch : நெல்லையில் திருடனை துரத்தி சென்ற பொதுமக்கள்! - பரபரப்பு சிசிடிவி காட்சி!

நெல்லையில் பூட்டிய வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையனை சிறுவர்கள் உள்பட பொதுமக்கள் துரத்தி சென்ற பரபரப்பு சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கையில் பையுடன் தப்பி ஓடிய கொள்ளையனை போலீஸ் தேடி வருகின்றனர்.
 

First Published Oct 26, 2022, 3:56 PM IST | Last Updated Oct 26, 2022, 3:56 PM IST

நெல்லை மாநகர் பாளையங்கோட்டை அடுத்த மகிழ்ச்சி நகரைச் சேர்ந்தவர் ராஜி. இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு ராஜி குடும்பத்துடன் சேலத்தில் உள்ள தங்கள் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று நள்ளிரவு கொள்ளையன் ஒருவன் மகிழ்ச்சி நகரில் உள்ள ராஜி வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளான். வீட்டில் இருந்த பொருட்களை திருடி கொண்டிருந்தபோது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ராஜி வீட்டு முன்பு திரண்டுள்ளனர்.

உடனே சுதாரித்துக் கொண்ட திருடன் கிடைத்த சில பொருட்களை மட்டும் பையில் அள்ளிக் கொண்டு சுவர் ஏறி குதித்து அங்கிருந்து தப்பி ஓடி உள்ளான்.. இதயதையடுத்து பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில் பெருமாள்புரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். இதனிடையே,  பொதுமக்கள் தப்பி ஓடிய கொள்ளையனை துரத்தி சென்றனர் ஆனாலும் கொள்ளையன் பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் கொள்ளையன் தப்பி ஓடும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. 

Video Top Stories