Watch : தமிழக எல்லை சோதனைச் சாவடியில் திடீர் ரெய்டு! கணக்கில் வராத ரூ.16,000 பறிமுதல்!
தென்காசியில் உள்ள தமிழக-கேரள எல்லை பகுதி சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டர். அப்போது கணக்கில் வராத ரூ.16000 ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது.
தென்காசி மாவட்டம், தமிழக - கேரளா எல்லைப் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மதியழகன் தலைமையிலான 5 பேர் கொண்ட போலீசார் மற்றும் ஒரு வட்டாட்சியர் அடங்கிய குழுவினர் புளியரை சோதனை சாவடியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சோதனை சாவடியில் உள்ள அறைகள் மற்றும் ஆவணங்களை முழுமையாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
சோதனை சாவடி மையத்தில் கணக்கில் காட்டப்படாத ரூ.16 ஆயிரத்து 180 இருந்தது தெரியவந்தது. அந்த பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், அது தொடர்பான ஆவணங்களை கேட்டபோது முறையான ஆவணங்கள் இல்லை என கூறப்படுகிறது.
தொடர்ந்து போக்குவரத்து சோதனை சாவடியில் இருந்த பணம் மட்டும் ஆவணங்களை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு துறையினர், சோதனையின் போது பணியில் இருந்த முனியாண்டி, செந்தில் பாண்டியன், செல்வ கணேஷ் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.