எம்பி ரவீந்திரநாத் மாமியாருக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ஓபிஎஸ்

அதிமுக எம்பி ஓ.பி.ரவீந்திரநாத்தின் மாமியார் உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரது உடலுக்கு ஓ.பன்னீர்செல்வம் இன்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.
 

Share this Video

அதிமுக பாராளுமன்ற உறுப்பினரும் ஓபிஎஸ்சின் மகனுமான ரவீந்திரநாத்தின் மாமியார் மூக்கம்மாள் நெல்லை சாந்தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று உயிரிழந்தார். உயிரிழந்த மூக்கம்மாளின் கணவர் கந்தசாமி பாண்டியன் ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் ஆவார். இந்த நிலையில் மறைந்த மூக்கம்மாளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவிந்திரநாத் எம்பி இருவரும் இன்று நெல்லை வந்தனர். அவர்கள் நேராக சாந்திநகர் இல்லத்துக்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த மூக்கம்மாளின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அங்கிருந்த உறவினர்களிடம் இருவரும் விசாரித்தனர். மேலும் நெல்லையைச் சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் மூக்கம்மாள் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Related Video