வாளால் கேக் வெட்டிய பிரபல ரவுடி.. சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ !!

பிரபல ரவுடியும், பாஜக பிரமுகரான உடையார் என்பவர் பிறந்த நாளின் போது வாளால் கேக் வெட்டிய  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

First Published Nov 2, 2022, 9:58 PM IST | Last Updated Nov 2, 2022, 9:58 PM IST

பிறந்த நாளின் போது வாளால் கேக் வெட்டிய  பாஜக பிரமுகர்  பிரபல ரவுடியான இவர் மீது கெரோனா ஊரடங்கின்  போது  கள்ளச் சாராயம் காய்ச்சியது அடிதடி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது  திருநெல்வேலி, சி.என். கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் உடையார் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது தலையில் கீரிடம் கழுத்தில் மாலை சகிதம் தனது குடும்பத்தினர் நண்பர்கள் முன்னிலையில் வாளால் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக  விசாரித்த போது, உடையார் மீது அடிதடி வழக்குகள் மட்டுமல்லாது கொரானா காலத்தில்  கள்ளச் சாராயம் காய்ச்சி விற்றது தொடர்பாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனிடையே  தற்போது அவர் பாஜகவில் இருப்பதாகவும், பாஜகவில் விளையாட்டு பிரிவு  மாவட்ட தலைவராக பதவி வகித்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க..2 நாள் மழைக்கே இற்றுப்போன தமிழ்நாடு.. 18 மாசம் ஆச்சு! முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விட்ட எடப்பாடி பழனிசாமி

Video Top Stories