சீரான நீர் வரத்து; குற்றால அருவிகளில் அலை மோதும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம்
தென்காசி மாவட்டத்தில் அனைத்து அருவிகளிலும் சீரான நீர் வரத்து காணப்படும் நிலையில், சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
தென்காசி மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளுக்கும் சீரான நீர் வரத்து இருந்து வருகின்ற நிலையில் தீபாவளி பண்டிகை விடுமுறையை தொடர்ந்து நேற்று வரை சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை முதல் மீண்டும் குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.
மேலும் தாராளமாக தண்ணீர் கொட்டி வருவதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. காலை முதலே குற்றாலம் பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டத்தின் காரணமாக ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது குற்றாலம் பேரருவியில் பரந்து விரிந்து தண்ணீர் கொட்டுவதின் காரணமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள் பகுதியிலும் பெண்கள் பகுதியிலும் உற்சாகமாக குளித்து வருகின்றனர்