Asianet News TamilAsianet News Tamil

நெல்லையில் அடிக்கின்ற வெயிலுக்கு கோவில் வளாகத்தில் கூலாக இளைப்பாறிய சிறுத்தை குட்டி

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், நெல்லை மாவட்டம் மாஞ்சோலை மலைப்பகுதியில் வெப்பத்தில் இருந்து காப்பதற்காக சிறுத்தை குட்டி ஒன்று அப்பகுதியில் உள்ள கோவில் வளாகத்தில் இளைப்பாறியது.

தமிழகத்தில் கோடை அக்னி நட்சத்திரம் முடிந்து ஒரு வாரத்திற்கும் மேலான நிலையில் வெயிலின் தாக்கம் இன்னும் நீடித்து வருகிறது. இந்நிலையில், வனப்பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்திருப்பதால் அதிலிருந்து தப்பிக்க வனவிலங்குகள் பல்வேறு வழிகளைக் கையாண்டு வருகின்றன. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம்  கோட்டத்திற்கு உட்பட்ட மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதியில் சிறுத்தை, மிளா, காட்டுப் பன்றி, கரடி, யானை உள்ளிட்ட வனவிலங்குள் உள்ளன.

இந்நிலையில், மாஞ்சோலை தேயிலைத் தோட்டப்பகுதியில் உள்ள அம்மன் கோவிலுக்கு சிலர் வழிபட சென்ற போது கோவிலின் முன்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தகர கொட்டகை நிழலில் குட்டி சிறுத்தை ஒன்று ஆசுவாசமாகப் படுத்து இளைப்பாறிக் கொண்டிருந்துள்ளது. இதைப் பார்த்த பக்தர்கள் பதுங்கியிருந்து சிறுத்தை படுத்திருந்ததை செல்பேசியில் வீடியோ பிடித்துள்ளனர். அந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Video Top Stories