Asianet News TamilAsianet News Tamil

பிரமாண்ட கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பில் நடிகர் அருண் பாண்டியன்

நெல்லையில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு தனியார் கேக் தயாரிப்பு நிறுவனத்தில் 500 கிலோ எடையிலான பிளம்கேக் தயாரிக்கும் பணியில் நடிகர் அருண்பாண்டியன் ஊழியர்களுடன் பங்கேற்றார்.

First Published Nov 25, 2023, 4:22 PM IST | Last Updated Nov 25, 2023, 4:22 PM IST

டிசம்பர் மாதம் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்கான முன்னேற்பாடுகள் தொங்கி நடைபெற்று வருகின்றன. கிறிஸ்துமஸ் பண்டிகையில் கேக் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் அடிப்படையில் கேக் தயாரிப்பு நிறுவனங்கள் கிறிஸ்மஸ் பண்டிகைக்காக கேக் தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருநெல்வேலி மாவட்டம் என் ஜி ஓ காலனியில் அமைந்துள்ள தனியார் கேக் நிறுவனத்தில் 500 கிலோ எடையில் பிரம்மாண்ட பிளம் கேக் தயாரிப்பதற்கான பணி துவங்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்வில் நடிகர் அருண்பாண்டியன் உட்பட ஊழியர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆர்வமுடன் கேக் தயாரிப்பு பணியில் பங்கேற்றனர். முன்னதாக அங்கு அமைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான மேஜையில் முந்திரி, உலர் திராட்சை, அத்திப்பழம், பாதாம், வால்நட் மற்றும் உலர் திராட்சை வகைகள் மற்றும் சர்க்கரை கலவையில் ஒயின் உள்ளிட்டவைகளை ஊற்றி நன்றாக கலந்து அதனை பதப்படுத்தி வைத்தனர். 

பின்னர் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு தயாரிக்கப்படும் பிளம் கேக்கோடு இதனை சேர்த்து சுவையான பிளம் கேக் தயாரிக்கப்படும். மேலும் கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு தங்கள் நிறுவனத்தில் பல்வேறு வகையான கேக் தயாரிக்கப்பட்டுள்ளதாக கேக் நிறுவனத்தினர்  தெரிவித்தனர். கிறிஸ்மஸ் பண்டிகைக்கு ஒரு மாதம் உள்ள நிலையில் தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை நெல்லையில் கலைக்கட்ட துவங்கி உள்ளது.