Asianet News TamilAsianet News Tamil

Watch : அரசால் கைவிடப்பட்ட கிராமமா? அடிப்படை வசதிகள் கேட்டு அல்லல் படும் நரிக்குடி மக்கள்!

சங்கரன்கோவில் அருகே சாலை வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாமல் அவதிப்படும் கிராம மக்கள். பலமுறை மனு கொடுத்தும் கண்டுகொள்ளாத அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

சங்கரன்கோவில் அருகே உள்ளது நரிக்குடி கிராமம். பஞ்சாயத்து உட்பட்ட நான்கு கிராமங்களில் சுமார் 800க்கும் மேற்பட்டோர் குடும்பங்களுடன் மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நரிக்குடி கிராமம், பிரதான சாலையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளதால் போக்குவரத்திற்காக எந்த ஒரு சாலை வசதியும் இதுவரை செய்து கொடுக்கவில்லை. இதனால் இந்த கிராமத்திற்கு முறையான பேருந்து வசதியும் செய்து தரப்படாததால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வயதானவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இங்கு வாழும் மக்களுக்கு குடிநீர் வசதி, வாறுகால் வசதி மற்றும் சுகாதார வசதி உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை என்று கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். வேகமாக வளர்ந்து வரும் நவீன உலகத்தில் சங்கரன்கோவில் சட்டமன்றத்திற்கு உட்பட்ட நரிக்குடி கிராம பஞ்சாயத்தில் உள்ள மக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து கொடுக்காததால் தாங்கள் இன்னும் பின்னோக்கிய காலத்தில் தான் வாழ்ந்து வரும் நிலையில் இருப்பது மிகவும் வேதனை அளிப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே தமிழக அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், மேலும் இந்த நிலைக்கு காரணமாக இருந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Video Top Stories