Viral Video : மது அருந்த டம்ளர் தர மாடிட்டியா? இந்த வாங்கிக்கோ... தர்ம அடி கொடுத்த குடிமகன்! - பரபரப்பு வீடியோ

நெல்லையில் அதிகாலை 4 மணிக்கு மது அருந்த டம்ளர் கொடுக்காத டீக்கடை உரிமையாளரை, போதை நபர் ஒருவர் சரமாரியாக தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
 

Share this Video

நெல்லை டவுண் தொண்டர் சன்னதியில் சுப்பையா என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார் இவர் வழக்கம் போல் இன்று அதிகாலை நான்கு மணிக்கு கடையை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தார். அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த மாரி என்ற மாரியப்பன் மதுபாட்டிலுடன் டீக்கடைக்கு வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் மது அருந்த டம்ளர் தரும்படி சுப்பையாவிடம் கேட்டுள்ளார். அதற்கு சுப்பையா டீக்கடையில் வைத்து மது அருந்தக்கூடாது என்று கூறியதோடு டம்ளர் கொடுக்கவும் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாரியப்பன் டீக்கடைக்குள் புகுந்து சுப்பையாவை சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் அங்கிருந்த சிலர் அவரை சமானப்படுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred



இந்நிலையில், மாரியப்பன் சுப்பையாவை தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, சுப்பையா அளித்த புகாரின் பேரில் டவுண் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மாரியப்பனை கைது செய்தனர். மேலும், அதிகாலை நேரம் மாரியப்பனுக்கு மது எப்படி கிடைத்தது என்பது குறித்தும் அவர் கள்ளச் சந்தையில் மது வாங்கினாரா என்பது குறித்தும் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Related Video