Viral Video: நெல்லையில் மனநலம் பாதித்த கணவனை கம்பால் தாக்கி கொடுமை படுத்திய பெண்; வீடியோ வெளியாகி பரபரப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த கணவனை அவரது மனைவி கம்பால் தாக்கி கொடுமை படுத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Share this Video

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறை பாத்திநாதர் தெருவைச் சேர்ந்தவர் பவுல் செல்வராஜ் (வயது 70). இவரது மனைவி செல்லின் மேரி (65). பவுல் செல்வராஜ் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் நேற்று காலையில் வீட்டின் முன் மலம் கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் செல்லின் மேரி அவரது கணவர் பவில் செல்வராஜை கம்பால் தாக்கியுள்ளார். இதனை பக்கத்து வீட்டினர் வீடியோ எடுத்த நிலையில் தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதன் அடிப்படையில் முக்கூடல் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது பவுல் செல்வராஜ் மகன் அளித்த புகாரின் பேரில் தற்போது செல்லின் மேரி மீது முக்கூடல் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கயல்விழி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Video