Asianet News TamilAsianet News Tamil

Viral : களக்காடு பகுதியில் மக்களை அச்சுறுத்தி வந்த கரடி கூண்டில் சிக்கியது!!

நெல்லை மாவட்டம் களக்காடு  அருகே புலவன் குடியிருப்பில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த கரடி வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது.
 

First Published Sep 22, 2022, 10:50 AM IST | Last Updated Sep 22, 2022, 10:50 AM IST

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட புலவன் குடியிருப்பு பகுதியில் கடந்த ஒரு வாரமாக கரடி ஒன்று பொதுமக்களை அச்சுறுத்தி தொல்லை கொடுத்து வந்துள்ளது. எனவே பொதுமக்கள் அளித்த தகவல் பேரில் கரடியை பிடிப்பதற்கு களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக  இயக்குநர் மற்றும் வன உயிரின காப்பாளர் ரமேஸ்வரன் உத்தரவின் பேரில் புலவன் குடியிருப்பு பகுதியில் கூண்டு வைக்கப்பட்டது.

இதனிடையே இன்று  கூண்டில் அந்த கரடி சிக்கியது. தற்போது வனச்சரக அலுவலர்   தலைமையிலான வன பணியாளர்கள் கூண்டில் சிக்கிய கரடியை காட்டு பகுதியில் கொண்டு விடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே நேற்று தான் பாபநாசம் அருகே பெண் ஒருவரை கரடி தாக்கியதில் அவர் படுகயமடைந்தார். தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய பகுதிகளில் கரடி நடமாட்டம் அதிகரித்திருப்பதால் அவற்றை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.