பின்னி பிணைந்து நடனமாடிய சாரை பாம்புகள்; வெறிக்க வெறிக்க வேடிக்கை பார்த்த பூனை

நெல்லையில் சாலையோரம் சாரை பாம்புகள் பின்னி பிணைந்து நடனமாடியதை அவ்வழியாக சென்றவர்கள் ஆச்சரியத்துடன் வேடிக்கை பார்த்தனர்.

Share this Video

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள இட்டமொழியில் இருந்து இட்டமொழிபுதூர் செல்லும் சாலை ஓரம் இரண்டு சாரைப்பாம்புகள் பின்னிப்பிணைந்து நடனமாடின. பாம்புகள் பின்னிப்பிணைந்து நடனம் ஆடுவதை அருகில் நின்ற கருப்பு பூனை விழிகள் பிதுங்க பார்த்து மிரண்டது.

அபூர்வமான இந்த இரு காட்சிகளையும் அந்த வழியே சென்ற பொது மக்கள் பார்த்து ரசித்ததுடன் தங்கள் செல்போனில் படம் பிடித்து நண்பர்களுக்கும் பகிர்ந்து உள்ளனர்.

Related Video