Kumbakarai Falls : கும்பக்கரை அருவியில் திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள்! வைரல் வீடியோ!

தேனி கும்பக்கரையில் ஏற்பட்ட திடீர் காட்டாற்று வெள்ளத்தில் சுற்றுலா பயணிகள் சிக்கிய சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகிறது.
 

Share this Video

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் திடீர்காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் பத்திரமாக வெளியேற்றினர்.

இந்தக் காட்டாற்று வெள்ளம் கும்பக்கரை வனப்பகுதி மற்றும் கொடைக்கானல் வனப்பகுதியில் பெய்த திடீர் மழையால் இந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது


YouTube video player
சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் வனத்துறையினர் சூழ்நிலையை அறிந்து கொண்டு நீர் வீழ்ச்சி பகுதியில் இருந்த சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றினார்கள்

சம்பவம் தொடர்பாக வனத்துறை அலுவலர் டேவிட்ராஜன் மற்றும் பெரியகுளம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி .மீனாட்சி தலைமையிலான காவல்துறையினர் விரைந்து வந்து நீர்வரத்துப்பகுதியை பார்வையிட்டனர்.

Related Video