தேனி: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேக தீபாராதனை - பொதுமக்கள் வழிபாடு

பிரதோஷத்தை முன்னிட்டு தேனி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் லிங்க வடிவில் காட்சியளிக்கும் சிவபெருமானுக்கும் நந்திவர்மனுக்கும் சிறப்பு அபிஷேக தீபாராதனை நடைபெற்றது.

Share this Video

தேனியில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக ஆலய வளாகத்தில் சிவபெருமானுக்கு எதிரே அமைந்திருக்கும் நந்திக்கு பால்,தயிர்,சந்தனம்,தேன்,இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதேபோல் லிங்க வடிவில் காட்சியளிக்கும் சிவபெருமானுக்கு பால், தயிர், சந்தனம், தேன், பல வகைகள் பின்னர் விபூதி காப்பு நடத்தி சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் நந்திவர்மனுக்கு எலுமிச்சை பழ மாலைகளும் அருகம்புல் மாலைகளாலும் வண்ண மலர் மாலைகள் அலங்கரிக்கப்பட்டது. மேலும் சிவபெருமானுக்கும் வண்ண மலர் மாலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு காட்சியத்தார். சிவபெருமானுக்கு சோடச உபசாரம் நடத்தி மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் தேனி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பிரதோஷ தினத்தில் சிவபெருமானை வணங்கி சென்றனர்.

Recharge Plan : ஒரே ரீசார்ஜ்.. 180 நாட்கள் வேலிடிட்டி.. இவ்வளவு கம்மி விலைக்கா? முழு விபரம் இதோ !!

Related Video