தனது வீட்டு வாசலில் தேசிய கொடியை ஏற்றி குடியரசு தினத்தை கொண்டாடிய ஓ.பன்னீர்செல்வம்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இல்லத்தின் முன்பாக குடியரசு தின விழா  தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

Share this Video

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை அக்ரஹாரத்தில் உள்ள அவரது இல்லத்தின் முன்பாக நடப்பட்டிருந்த கொடிக்கம்பத்தில், தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். 

இதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த தனது ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி குடியரசு தின விழாவை கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் ஓபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர் சையது கான் அவரது ஆதரவு நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Related Video