தேனியில், பணி செய்ய விடாமல் தடுக்கும் விசக செயலாளர்!- நடவடிக்கை கோரி ஊராட்சி மன்ற தலைவர் புகார்!

விசிக மாவட்ட செயலாளர் பணி செய்ய விடாமல் தடுப்பதாகவும் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஊராட்சி மன்ற தலைவர் புகார் அளித்துள்ளார்.
 

First Published Jun 13, 2023, 3:14 PM IST | Last Updated Jun 13, 2023, 3:14 PM IST

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சீப்பாலக்கோட்டை கிராம ஊராட்சியில், சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று, ஊராட்சி மன்ற தலைவியாக கார்த்திகா தேவி உள்ளார்.

இவர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் சுருளி குறித்த, மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். அதில், சுருளி தொடர்ந்து பல்வேறு இடையூறு செய்து வருவதாகவும், மாதம் தோறும் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், தொடர்ந்து ஊராட்சி மன்ற வளர்ச்சி திட்ட பணிகளை செய்ய விடாமல் மிரட்டி வருவதாக குறிப்பிட்டுளார்.

மேலும் பொது மக்களை தூண்டி விட்டு குடிநீர் வசதி இல்லை என சாலை மறியல் செய்தும், ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டி போராட்டம் நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஊராட்சி மன்ற தலைவி கார்த்திகாதேவி தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.