ஐயா இது போலீஸ் ஸ்டேசன், பெட்ரூம் இல்ல; போதை ஆசாமியால் கலகலப்பான மகளிர் காவல் நிலையம்

ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பு மது குடித்து விட்டு வந்து நிற்க முடியாமல் போதையில் படுத்துறங்கிய நபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share this Video

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பேருந்து நிலையம் முன்பாக அனைத்து மகளிர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. வழக்கம் போல காவல் நிலையம் பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்த வேளையில் காவல் நிலையம் முன்பு மது குடித்து விட்டு தள்ளாடியபடி வந்து நின்ற நபர் ஒருவர் போதை அதிகமாகி நிற்க முடியாமல் தள்ளாடியபடி சில நிமிடங்களில் அனைத்து மகளிர் காவல் நிலையம் முன்பாகவே கால்களை நீட்டி படுத்து போதையில் உறங்கி விட்டார்.

இதனை கண்டுகொள்ளாத காவல் துறையினர் மற்றும் அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அவரவர் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கவே நீண்ட நேரமாக படுத்து உறங்கிய அவர் போதை தெளிந்ததும் தானாகவே எழுந்து அங்கிருந்து நடந்து சென்றார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Related Video