தேமுதிக தலைவர் விஜயகாந்த் குணம் பெறவேண்டி தொண்டர்கள் அங்கபிரதட்சணம் செய்து சிறப்பு வழிபாடு

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணம் பெற வேண்டி தேனி கௌமாரியம்மன் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்து தேமுதிகவினர் சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர்.

Share this Video

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் பாதித்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சில நாட்களாக சிகிச்சை பெற்று வருகின்றார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டி தேமுதிகவினர் தமிழகம் முழுவதும் வழிபாடு நடத்தி வருகின்றனர். 

அந்த வகையில் தேனி மாவட்ட தேமுதிக சார்பில் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலில் இன்று சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற ஆன்மீகத் தளமான வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் வளாகத்தில் தேமுதிகவினர் அங்கப்பிரதட்சணம் செய்தனர்.

அதனைத் தொடர்ந்து சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தேனி மாவட்ட தேமுதிக நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் விஜயகாந்த் ரசிகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Video