ஆண்டிபட்டி அருகே கள்ளச்சாராய மூலப் பொருட்கள் பறிமுதல்! போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!

ஆண்டிபட்டி அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச முயற்சி செய்தவரை பிடிக்க சென்ற போலீசாருக்கு, கொலை மிரட்டல் விடுத்த நபரை பல்வேறு வழக்குகளின் கீழ் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்ற்னர்.
 

First Published May 31, 2023, 1:33 PM IST | Last Updated May 31, 2023, 1:33 PM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் கடமலைக்குண்டு அருகே பண்டார ஊத்து மலை கிராமப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக மயிலாடும்பாறை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து எஸ் எஸ் ஐ மணிகண்டன் தலைமையாலான போலீசார் அங்கு சென்று பார்த்தபோது பொன்னன் படுகையைச் சேர்ந்த சின்னன் (வயது 57) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக கடுக்காய், பட்டை, நமஸ்காரகட்டி உள்ளிட்ட மூலப்பொருட்களை ஊரல் போட்டு வைத்திருந்தது தெரியவந்தது.
பின்னர் அவரிடம் இருந்த மூலப்பொருட்களை பறிமுதல் செய்ய முயற்சி செய்த போலீசாரை அரசு பணி செய்யவிடாமல் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து அவரிடமிருந்து கள் சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த மூலப்பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது பல்வேறு வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 

Video Top Stories