VIDEO : தேனியில் நடைபெற்ற கிடா முட்டு திருவிழா! - கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கோலாகலம்!

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக, தேனி வீரபாண்டி விளையாட்டு மைதானத்தில் கிடா முட்டு திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
 

First Published Jun 12, 2023, 11:44 AM IST | Last Updated Jun 12, 2023, 11:44 AM IST

தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் மைதானத்தில், கலைஞரின் நூறாவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் முதல் முறையாக கிடா முட்டு திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவை தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் நிகழ்ச்சியை துவக்கி வைத்து தலைமை தாங்கினார். இவருடன் திமுக தேனி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ரத்ன சபாபதி மற்றும் வீரபாண்டி பேரூராட்சி தலைவர் கீதா சசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சி மதுரை திண்டுக்கல் தேனி ஆகிய பகுதிகளில் இருந்து 50 ஜோடி ஆடுகள் களம் இறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறந்த விளையாடிய 15 ஆடுகளுக்கு பீரோ, மின்விசிறி, அண்டா உள்ளிட்டவை பரிசாக வழங்கப்பட்டது.

இரண்டாம் இடம் பிடித்த 13 ஆடுகளுக்கு சிறப்பு பரிசாக மின்விசிறி வழங்கப்பட்டது. மூன்றாம் பரிசாக 22 ஆடுகளுக்கு சில்வர் அண்டா பர்சாக வழங்கப்பட்டது.