15 டிராக்டர்கள்; 500 வகையான சீர்வரிசை - மகளின் திருமணத்தில் ஊரையே அசர வைத்த தொழிலதிபர்

ஒரத்தநாடு அருகே நடந்த நிச்சயதார்த்த விழாவில் 500 வகையான சீர்வரிசை பொருட்களை 15 டிராக்டர்களில் வைத்து. 10 கிமீ எடுத்து வந்த மணப்பெண் வீட்டாரின் கழுகுப்பார்வை காட்சி.

First Published Jun 22, 2023, 8:55 AM IST | Last Updated Jun 22, 2023, 8:55 AM IST


தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அம்மா திருமண மண்டபத்தில் ஒரத்தநாடு பகுதியை சேர்ந்த திருந்தையனுக்கும், மலேசியா தொழில் அதிபர் சிவகுருநாதன் மகள் தினோஷாவிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயத்தார்த்திற்கு சிவகுருநாதன் தனது சொந்த ஊரான அருமலையிலிருந்து திருமண மண்டபத்திற்கு தனது உற்றார், உறவினர். நண்பர்களுடன் சீர்வரிசை எடுத்து வந்தார். 10 கிமீ தூரத்திற்கு 500 வகையான சீர்வரிசைப்பொருட்களை 15 டிராக்டர்களில் வைத்து எடுத்து வந்தார். இதன் கழுகுப் பார்வை காட்சி.

Video Top Stories