அடியாட்களை வரவைத்து தனியார் பேருந்து நடத்துநரை புரட்டி எடுத்த இளைஞர்; கும்பகோணத்தில் பரபரப்பு

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பேருந்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் பயணி தனது நண்பர்களை வரவழைத்து நடத்துநரை சரமாரியாக தாக்கும் காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

First Published Aug 31, 2023, 9:43 AM IST | Last Updated Aug 31, 2023, 9:43 AM IST

தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த தனியார் பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கும், நடத்துநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த பயணி சுந்தரபெருமாள் கோயில் பகுதியில் இருந்த தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

அதன் படி சம்பந்தபட்ட பேருந்து சுந்தரபெருமாள் கோவில் பகுதிக்கு வந்ததும், அந்த பேருந்தை வழிமறித்து 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் நடத்துநர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில் காயமடைந்த தனியார் பேருந்து நடத்துநர் வலங்கைமானை சேர்ந்த ராஜலிங்கம் கும்பகோணம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இத் தாக்குதல் தொடர்பாக சுவாமிமலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Video Top Stories