அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் அரசியல் கட்யினர் மாலை அணிவித்து மரியாதை

சட்டமேதை அம்பேத்கரின் 67ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கும்பகோணத்தில் அமைக்கப்பட்டு இருந்த அம்பேத்கரின் புகைப்படத்திற்கு அரசியல் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

First Published Dec 6, 2023, 6:54 PM IST | Last Updated Dec 6, 2023, 6:54 PM IST

இந்திய அரிசயலமைப்புச் சட்டத்தின் தந்தை என அழைக்கப்படும் சட்டமேதை அம்பேத்கரின் 67ம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி நாடு முழுவதும் பல்வேறு அரிசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் கும்பகோணம் மின்வரிய அலுவலகத்தில் அமைக்கப்பட்டு இருந்த அம்பேத்கரின் படத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்னர் உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர்.

Video Top Stories