காதலர் தின கொண்டாட்டம்; தஞ்சை பெரியகோவிலில் தாலியுடன் சுற்றி திரிந்த இந்து மக்கள் கட்சியினர் - போலீஸ் எச்சரிகை

தாலி கட்டும் போராட்டத்தால் காதலர்களுக்கு தஞ்சை பெரிய கோவிலில் அனுமதி மறுப்பு. காதலர்களுக்கு அறிவுரை வழங்கி திருப்பி அனுப்பி வைத்த காவல்துறையினர்.

Share this Video

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி காதலர்கள் தங்களது அன்பை வெளிப்படுத்தும் வகையில் ரோஜாப்பூ மலர்கள், வாழ்த்து அட்டைகள், சாக்லெட் மற்றும் விதவிதமான பரிசு பொருட்களை வாங்கி தங்களுக்கு பிடித்தவர்களுக்கு பரிசளித்து மகிழ்ந்து வருகின்றனர். மேலும் தங்களின் இணையுடன் சுற்றுலா தலங்கள், பூங்கா, திரையரங்கு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று தங்கள் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் இந்து மக்கள் கட்சி சார்பில் தாலி கட்டும் போராட்டம் நடத்த வந்தனர். அவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இருந்த போதும் கோவில் முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கோவிலுக்கு வரும் காதலர்களுக்கு அறிவுரை கூறி கோவிலுக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

Related Video